டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
x

டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிப்பு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை.

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்யவும், காலி மதுபாட்டில்களை சேகரிக்கவும் பார் நடத்தும் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது. அதில், தற்போது பார் உரிமம் பெற்று பார்களை நடத்தி வருபவர்கள், புதிதாக உரிமம் பெறும் நபர்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதை எதிர்த்து, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன் ஆஜராகி, ''ஏற்கெனவே பார் உரிமம் பெற்று பார்களை நடத்தி வருபவர்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் இடையே பார் நடத்தும் இடம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அந்த நில உரிமையாளருக்கும், பார் உரிமையாளர்களுக்கும்தான் ஒப்பந்தம் உள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த இடத்தை 3-வது நபருக்கு பார் நடத்த வழங்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது'' என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காஞ்சீபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் குத்தகைக்காக ஆகஸ்டு 2-ந்தேதி வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story