புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்குடி
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி அழகப்பா நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பெரியார் சிலையில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜீலியட்சில்வியா தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழக செயலாளர் டாக்டர் குமரேசன் முன்னிலை வகித்தார். காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன்சிலர்கள் பசும்பொன்மனோகரன், சித்திக், கார்த்திகேயன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், ஜே.சி.ஐ. கிங்ஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நர்சிங் மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் புற்றுநோய்க்கு எதிரான வாசகங்கள் குறித்த பதாகைகள் ஏந்தியவாறு புகைப்பழக்கத்தை தவிர்ப்போம், மது குடிப்பதை நிறுத்துவோம், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.