புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு


புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
x

புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு

திருப்பூர்

திருப்பூர்

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக நேற்று கல்லூரி வளாகம், புஷ்பா ரவுண்டானா பகுதிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவர்கள் குழுக்களாக பிரிந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை சக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் ஒரு கொடிய நோய், புகையிலை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ெதாற்று உண்டாகிறது என மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. இந்த கொடிய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுவது தொடர்பாக தன்னார்வலர்கள் இணைந்து வருகிற 8-ந்தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கத்தான் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.


Next Story