மாவட்ட அளவிலான தேர்வில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட அளவிலான தேர்வில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள லியான் நகரில் 47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்குபெற தகுதி வாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக, மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. 10 தொழில் துறைகளில், 55 தொழிற்பிரிவுகளில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்போட்டியில் பங்கேற்க 1.1.1999 அன்றும், அதற்கு பின்னரும் பிறந்த, தனித்திறன் பெற்ற பள்ளிக்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், கேட்டரிங், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிக் கல்வி தொடராத இருபால் இளைஞர்களும், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான திறன் போட்டி குறித்த விவரங்களை "நான் முதல்வன்" இணையதளத்திலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-299140 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.