ஆரணியில் உதவி கலெக்டரை முற்றுகையிட்ட தேர்வர்கள்


ஆரணியில் உதவி கலெக்டரை முற்றுகையிட்ட தேர்வர்கள்
x

தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு: ஆரணியில் உதவி கலெக்டரை முற்றுகையிட்ட தேர்வர்கள்

திருவண்ணாமலை

ஆரணி

தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு இன்று நடந்தது.

இதற்காக ஆரணி நகரிலும், சுற்று வட்டார பகுதியிலும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 12 ஆயிரத்து 940 பேர் தேர்வு எழுதினர். 1,732 பேர் தேர்வு எழுதவில்லை.

இந்த நிலையில் ஆரணி நகரில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் காலதாமதமாக 100-க்கும் மேற்பட்டோர் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

அப்போது ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி அங்கு ஆய்வு செய்வதற்காக வந்தார். அவரது வாகனத்தை தேர்வு எழுத வந்தவர்கள் முற்றுகையிட்டு எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அவர், காலதாமதமாக வந்தது உங்களுடைய தவறு கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதி கிடையாது என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story