ராணுவ வீரருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வேலம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் நாயக்பிரபு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கரூர் மாவட்ட முப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அவருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இதில் மாவட்ட முப்படை வீரர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபால், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story