தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் முன் கரும்பு அலங்காரம்
தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் முன் கரும்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தென்காசி
தைப் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்த நிலையில் தென்காசி போலீசார் சார்பில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு இருபுறமும் கரும்புகளை கட்டி அலங்காரம் செய்திருந்தனர். மொத்தம் 225 கரும்புகள் இவ்வாறு கட்டப்பட்டிருந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து பாராட்டினர். மேலும் பலர் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story