கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சோதனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சரசு சப் இன்ஸ்பெக்டர் ரூபாவதி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கைது
அப்போது ஆட்டூர் மரைக்காகோறையாறு பாலம் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவர் களப்பால் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், (வயது 36) என்பதும் அவர் விற்பனைக்காக ஒரு கிலோ 100கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.
---