ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்


ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
x

கும்பகோணத்தில், ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில், ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சாக்குமூட்டை

திருச்சி ெரயில்வே தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் ெரயிலில் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று பனாரசில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை மேற்கொண்டனர். இந்த ெரயில் கும்பகோணம் ெரயில் நிலையத்துக்கு வருவதற்கு சற்று முன்பு ெரயிலின் பின்பக்கம் உள்ள முன்பதிவு செய்யப்படாத ெரயில் பெட்டியில் கழிவறை அருகே கிடந்த வெள்ளை நிற சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர்.

கஞ்சா

சோதனையில் அந்த மூட்டையில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பொட்டலங்கள் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் அந்த ெரயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ெரயில் பயணிகள் யாரும் அந்த மூட்டைக்கு உரிமை கோராததால் சாக்கு முட்டையை கும்பகோணம் ெரயில் நிலையத்தில் இறக்கி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அந்த சாக்கு முட்டையில் 10 கிலோ எடை உள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 3 பொட்டலங்களில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

ரூ.3 லட்சம்

இந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை யார் எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகப்பட்டினம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவில் ரயில்வே போலீசார் நேற்று மாலை ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது.


Next Story