சத்தி தங்க நகரத்தில் உடைந்த கிளை வாய்க்கால் மதகு சீரமைப்பு


சத்தி தங்க நகரத்தில் உடைந்த கிளை வாய்க்கால் மதகு சீரமைப்பு
x

சத்தி தங்க நகரத்தில் உடைந்த கிளை வாய்க்கால் மதகு சீரமைப்பு

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் தங்க நகரத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிரிகிறது. கடந்த 12 நாட்களுக்கு முன்பு இந்த கிளை வாய்க்காலின் மதகு உடைந்தது. மேலும் வாய்க்காலின் மேல் பகுதியிலும் ஓட்டை விழுந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை இருந்தது.

இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடனே பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தினார்கள். பின்னர் மதகும், வாய்க்கால் உடைப்பும் சீரமைக்கப்பட்டது. இதனால் கிளை வாய்க்காலில் அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட முயன்றார்கள். ஆனால் அந்த பகுதி விவசாயிகள் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், இப்போது தண்ணீர் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Next Story