கஞ்சா, போதை பவுடர் வைத்திருந்த 2 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் கஞ்சா, போதை பவுடர் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி,;
ருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் கஞ்சா, போதை பவுடர் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த மாற்றுத்திறனாளிகள் கழிவறை அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த கூடநாணல் தெற்கு தெருவை சேர்ந்த அய்யா என்கிற தங்கத்துரை (26) மற்றும் திருவரம்பூர் முடுக்குப்பட்டி யைசேர்ந்த லயன் என்கிற முருகானந்தம் (33) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் 1¼ கிலோ கஞ்சா, மற்றும் 750 கிராம் போதை பவுடர் வைத்திருந்தது தெரியவலந்தது. இதைத்தொடர்ந்து தங்கத்துரை, முருகானந்தம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story