போலீசாருக்கு குளுமை தொப்பி
தாராபுரத்தில் பஸ்நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் மற்றும் உடுமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் போலீசார் அணிந்துள்ள சாதாரண தொப்பி சூடேறி பணியின் போது அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று போக்குவரத்து போலீசாரின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தாராபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் இருந்து பாதுகாக்கும் சோலாரை உறிஞ்சி தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு போலீசாருக்கு வழங்கினார். அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.