பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் வட்டார வள மையம் சார்பில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கென்னடி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களின் திறன் மேம்படுத்துதல், பள்ளியில் கற்றல் கற்பித்தல் குறித்தும், கையாள்வது குறித்தும் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பார்வையிட்டார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story