ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் மூன்று நாட்கள் நடக்கிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகமும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் இணைந்து நடத்தும் இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். பயிற்சி முகாமினை திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பேசினார்.
திருவள்ளுவர் பல்கலை கழகத்தோடு இணைந்து இயங்கக்கூடிய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பதிவாளர் விஜயராகவன், யோகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தை சேர்ந்த ஆடரஸ் மிட்டல் சிறப்புரை ஆற்றினார். முடிவில் சையத் அலி நன்றி கூறினார்.