விஜயதசமிதினத்தையொட்டி மகர நோன்பு நிகழ்ச்சி


விஜயதசமிதினத்தையொட்டி மகர நோன்பு நிகழ்ச்சி
x

விருதுநகரில் விஜயதசமிதினத்தையொட்டி மகர நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் விஜயதசமிதினத்தையொட்டி மகர நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சொக்கநாத சுவாமி சந்திரசேகர் ரூபராக நகரின் வடக்கு பகுதியில் எழுந்தருளி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீய சக்திகளை எட்டு திசைகளிலும் அம்புஎய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு சமுதாயத்தினர் புலி வேடமிட்டு ஊர்வலமாக சென்று தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர்.


Next Story