கார், ஆட்டோ கண்ணாடியைஉடைத்த 3 பேர் கைது


தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கார், ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கார், ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 51). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அதே போன்று அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

இந்த நிலையில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (வயது 19), இசக்கிமுத்து மகன் செல்வ கணபதி என்ற ராகுல் (20), இருதயராஜ் மகன் மரிய அந்தோணி சாம் (19) ஆகியோர் சேர்ந்து குடிபோதையில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மற்றும் கார்களின் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே 10 வழக்குகளும், செல்வகணபதி என்ற ராகுல் மீது ஒரு வழக்கும், மரிய அந்தோணி சாம் மீது ஒரு கொலை வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story