கார், பஸ் மோதி விபத்து; 5 பேர் காயம்
கார், பஸ் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்
மதுரை
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை விளாங்குடியை சேர்ந்த புகழேந்தி மகன் நவீன் (வயது 31). இவர் மதுரையில் இருந்து மேலக்கால் நோக்கி காரில் சென்றார். நாகமலைபுதுக்கோட்டை அடுத்து துவரிமான் முத்தையா கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. அதே நேரம் அரசு பஸ்சின் டிரைவர் செல்வக்குமார் கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பியபோது சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கடியராஜா (36), தாரா (42), தாராவின் கணவர் கஸ்தூரி, அபிநயா(25) மற்றும் காரை ஓட்டி வந்த நவீன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story