கொடைரோடு சுங்கசாவடியில் மோதிய கார்
கொடைரோடு சுங்கசாவடியில் கார் மோதியது.
திண்டுக்கல்
கோவை மாவட்டம் சென்னிமலையில் இருந்து திருசெந்தூருக்கு கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை, பழனிசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கசாவடியில் 2-வது வழித்தடத்தில் கார் வந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி, சுங்கசாவடியின் நடைமேடையில் இருந்த கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்த சமயத்தில் அங்கு வேறு வாகனங்கள் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த பழனிச்சாமியும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story