அரசு பஸ் மீது கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உள்பட 4 பேர் படுகாயம்


அரசு பஸ் மீது கார் மோதல்; அய்யப்ப பக்தர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தொண்டியில் இருந்து குமுளி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டினார். லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதை இரைச்சல் பாலம் அருகே பஸ் வந்தது. அப்போது எதிரே சபரிமலையில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வந்த கார் எதிர்பாரதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. இதில் காரில் வந்த வெங்கடேஷ், சுப்பிரமணிரெட்டி, சரவண குமார், கார் டிரைவர் பிரசாந்த் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரனையில் காயமடைந்தவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திரா நோக்கி வந்தபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story