லாரி மீது கார் மோதி பெண் பலி


லாரி மீது கார் மோதி பெண் பலி
x
சேலம்

வாழப்பாடி:-

ஆத்தூர் நரசிங்கபுரம் புதுஉடையம்பட்டி கவுண்டர் பகுதியைச் சேர்ந்த அர்த்தனாரி மனைவி அஞ்சலம் (வயது 60). இவர், காரில் சேலம் சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். காரை அஞ்சலத்தின் மகன் நவநீதகிருஷ்ணன் ஓட்டி வந்தார். வாழப்பாடி பகுதியில் வந்த போது சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியது. இதில் காயம் அடைந்த அஞ்சலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஞ்சலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் நவநீதகிருஷ்ணன் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story