மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கணவன்- மனைவி பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கணவன்- மனைவி பலி
x

கலவை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார்மோதியதில் கணவன்- மனைவி பலியானார்கள். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

கலவை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார்மோதியதில் கணவன்- மனைவி பலியானார்கள். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கணவன்- மனைவி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியில் வசித்தவர் பழனி (வயது 54). இவரது மனைவி லட்சுமி (47). பழனி தெருக்கூத்து நாடக கலைஞர். கணவன்- மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் முள்வாடியை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி லட்சுமி காயத்துடன் உயிர்த்தப்பினார். அவரை வாலாஜா மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டிரைவர் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கல் சரவணமூர்த்தி, சுரேஷ்பாப, தனிப்பிரிவு ஏட்டு காந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று கணவன்- மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரதி பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெங்களூரைச் சேர்ந்த கார் டிரைவர் அஞ்சும்லியாத் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்- மனைவி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story