கார்கள் மோதி விபத்து
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
நீலகிரி
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாைவயொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் அதிகமாக சென்றன. தட்டபள்ளம் அருகே சுற்றுலா பயணிகள் இருவரது கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்த கேரள மாநில சுற்றுலா பயணியின் கார் முள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர திட்டில் மோதியது. மலைப்பாதையில் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது. 2-வது கியரில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story