மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
எட்டயபுரம் அருேக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். அவரது அக்காள் படுகாயம் அடைந்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருேக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். அவரது அக்காள் படுகாயம் அடைந்தார்.
அக்காள்-தம்பி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அ. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 35). வேன் டிரைவரான இவரும் அவரது சகோதரி தமிழ்செல்வியும் (45) நேற்று விருதுநகர் மாவட்டம் நல்லியில் உள்ள சிங்கமுடையார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளுக்கு சென்றனர்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே கோட்டூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் ஒரு கார் வந்தது. கண் அமைக்கும் நேரத்தில் அந்த கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மீது மோதியது. இதில் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்று கார் நின்றுள்ளது.
பலி
இந்த விபத்தில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தமிழ் செல்வி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பலியான தமிழ்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவரிடம் விசாரணை
இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த மதுரை கோச்சடையைச் சேர்ந்த சந்தோஷ் பிரசன்னா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.