லாரி மீது கார் மோதல்; பெண் பலி


லாரி மீது கார் மோதல்; பெண் பலி
x

பரங்கிப்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பாிதாபமாக இறந்தார்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி ரமா (வயது 40). இவர் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் புறப்பட்டார். பரங்கிப்பேட்டை அருகே பி,முட்லூர் பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாக தெரிகிறது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ரமா ஓட்டிச்சென்ற கார் அந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரமாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story