லாரி மீது கார் மோதல்:சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்


லாரி மீது கார் மோதல்:சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்
x

லாரி மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடத்தைச் சேர்ந்தவர் அசேன் என்பவர் மகன் சித்திக் (வயது 18).இவரும், அதே பகுதியை சேர்ந்த அப்துல் பாசல் (25), அரியலூரை சேர்ந்த அமீர்ஜான் பாட்ஷா மகன் இஸ்மாயில் (29) ஆகியோர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பெண்ணாடத்தை சேர்ந்த சையத் சலாம் (26) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சனமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த சித்திக், இஸ்மாயில், அப்துல் பாசல் மற்றும் காரை ஓட்டி வந்த சையத் சலாம் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story