கார்கள் மோதி விபத்து; சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம்


கார்கள் மோதி விபத்து; சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்,

நடுவட்டம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதின

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சையத் அப்ரார் (வயது 24). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் ஊட்டிக்கு காரில் வந்தார். பின்னர் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு பைக்காரா செல்வதற்காக மாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது 9-வது மைல் அருகே சென்ற போது, சையத் அப்ராரின் காரும் பைக்காராவில் இருந்து ஊட்டி நோக்கி வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் சையத் அப்ரார், நிஜாம் (59), ஜாகீர் (19), பாஷில் (19) மற்றும் எதிரே வந்த காரில் இருந்த கோவை காளப்பட்டியை சேர்ந்த பிரசன்னா (38), கிறிஸ்டோபர் (36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்த நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் பைக்காரா போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் 2 கார்களின் முன்பகுதியும் சேதமடைந்தது.இதுகுறித்து சையத் அப்ரார் கொடுத்த புகாரின் பேரில் பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கோவை காளப்பட்டியை சேர்ந்த டிரைவர் பிரின்ஸ் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, சமவெளியில் இருந்து வரும் டிரைவர்கள் மலைப்பகுதியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளனர்.


Next Story