மரத்தில் கார் மோதி விபத்து:கர்ப்பிணி உட்பட5 பேர் படுகாயம்


தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மரத்தில் கார் மோதி விபத்தில் கர்ப்பிணி உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டிகண்ணு (வயது 60). இவர் நேற்று காரில் தனது குடும்பத்தினருடன் நேற்று இருக்கன்குடி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மதியம் அவர்கள் ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சாயல்குடி காந்திநகர் மாரீயூரை சேர்ந்த வெற்றிவேல்முருகன் (37) என்பவர் ஓட்டினார். எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த பாண்டிகண்ணு, அவரது மனைவி சரஸ்வதி (53), வேம்பாரை சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி அழகேஸ்வரி (19), ஓட்டுனர் வெற்றிவேல்முருகன், அவரது மனைவி வளர்மதி (36) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த எட்டயபுரம் போலீசார் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்த அழகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story