மொபட் மீது கார் மோதல்; கட்டிட தொழிலாளி பலி


மொபட் மீது கார் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
x

நெல்லை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கட்டிட தொழிலாளி

நெல்லை அருகே தாழையூத்து கணேஷ்நகர் ஹவுசிங்போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் புகாரி. இவருடைய மகன் செய்யது அபுதாகீர் (வயது 45). கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று காலையில் தன்னுடன் வேலை பார்க்கும் சாரதாம்பாள் நகரைச் சேர்ந்த சண்முகவேலுடன் (55) மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார்.

மொபட் மீது கார் மோதல்

மொபட் தாழையூத்து பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செய்யது அபுதாகீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயமடைந்த சண்முகவேலை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story