மொபட் மீது கார் மோதல்; அரசு பள்ளிதலைமையாசிரியை பலி


மொபட் மீது கார் மோதல்; அரசு பள்ளிதலைமையாசிரியை பலி
x

அன்னவாசல் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியை பலியானார்.

புதுக்கோட்டை

மொபட் மீது கார் மோதல்

புதுக்கோட்டை விநாயகபுரம் 2-ம் வீதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி வீரத்தங்காள் (வயது 48). இவர், பரம்பூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் புதுக்கோட்டையில் இருந்து தினமும் மொபட்டில் பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு மொபட்டில் சென்று விட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுக்கோட்டை பெருமநாடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது பின்னால் வந்த கார் வீரத்தங்காள் ஓட்டி வந்த மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

தலைமையாசிரியை சாவு

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்ந நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி வீரத்தங்காள் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story