தடுப்புக்கட்டை மீது கார் மோதல்; பெண் பலி
தடுப்புக்கட்டை மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
விருத்தாசலம்,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னபாப்பா(வயது 42). இவரது கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், தர்மபுரி மாவட்டம் அரியாங்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடன் சின்னபாப்பா வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி சந்திரன், சின்னபாப்பா ஆகிய இருவரும் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். பரவளூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னபாப்பா, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னபாப்பா நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.