சாலையோர வீட்டு சுற்றுச்சுவர் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு


சாலையோர வீட்டு சுற்றுச்சுவர் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே காம்பவுண்டு சுவரில் கார் மோதியதில் ரப்பர் பால் வடிப்பு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே காம்பவுண்டு சுவரில் கார் மோதியதில் ரப்பர் பால் வடிப்பு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நண்பர்கள்

அருமனை அருகே உள்ள மாங்காலை அம்பலகாலை கோடிக்காமூலை பகுதியை சேர்ந்தவர் தனிஷ் (வயது28), ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி.

இவருடைய நண்பர் களியக்காவிளை ஒற்றப்பனவிளை கல்லுவிளையைச் சேர்ந்த பிரபின் (26). இவர் பணன்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

சுவரில் மோதியது

சம்பவத்தன்று பிரபின் ஒரு காரில் தனிஷை அழைத்துக் கொண்டு பனங்காலையில் இருந்து மருதன்கோட்டுக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். பிரபின் காரை ஓட்டினார். தனிஷ் பின்னால் அமர்ந்திருந்தார். கார் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள தங்கசாமி என்பவரின் வீட்டு காம்பவுண்ட்டு சுற்றுச்சுவரில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

தொழிலாளி சாவு

இதைகண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த தனிஷ், பிரபின் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சை்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரபினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பிரபின் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story