கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
திருச்சி

மண்ணச்சநல்லூரில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்து இருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது.

கார் டிரைவர்

லால்குடி அருகே உள்ள திருமழபாடி கீழமுதலியார் தெருவை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவருக்கு வைத்தியநாதன் (வயது 57) என்பவர் உள்பட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில், 2-வது மகனான வைத்தியநாதனுக்கு திருமணம் ஆகவில்லை.

கார் டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்கும், இவரது தம்பிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வைத்தியநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார்.

தற்கொலை

நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், சொத்து தராமல் தம்பி ஏமாற்றுவதால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்து இருந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story