வளவனூர் அருகேகார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வளவனூர் அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
வளவனூர்,
வளவனூர் அருகே உள்ள கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் லோகநாதன் (வயது 28). கார் டிரைவரான இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. திஷ்வந்த் என்ற 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று லோகநாதன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story