கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சத்துவாச்சாரியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் கமால் (வயது 54), கார் டிரைவர். இவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், போதிய வருமானம் இல்லாததால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கமால் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story