கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்டதால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாயப்பன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27), கார் டிரைவர். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பவ்வியலட்சுமி என்பவரை காதலித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூரில் வாடகை வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற வினோத்குமார் குடித்துவிட்டு போதையுடன் வீடு திரும்பியதாக தெரிகிறது. இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வினோத்குமாரின் தாய்க்கு போன் செய்து கூறியுள்ளார்.

இதனால் வேதனை அடைந்த வினோத்குமார் வீட்டுக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பவ்வியலட்சுமி கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அறையில் வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story