கார் டிரைவர் விபத்தில் பலி


கார் டிரைவர் விபத்தில் பலி
x

பாளையங்கோட்டையில் கார் டிரைவர் விபத்தில் பலியானார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜெயக்குமார் (வயது 30). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பாளையங்கோட்டை வருமான வரி அலுவலகம் அருகே ஒரு இரும்புக்கடை முன்பு லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஜெயக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் அந்த லாரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story