தொழிலதிபரை அரிவாளால் வெட்டிய கார் டிரைவர் கைது
நாகர்கோவிலில் மனைவியுடன் பழகியதை கண்டித்ததால் தொழிலதிபரை அரிவாளால் வெட்டிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மனைவியுடன் பழகியதை கண்டித்ததால் தொழிலதிபரை அரிவாளால் வெட்டிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியுடன் பழக்கம்
இரணியல் அருகே பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவில் பகுதியில் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை பாா்த்து வந்தார்.
இந்தநிலையில் டிரைவர் சகாய ஜெனிபருக்கும், தொழிலதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனை அறிந்த தொழிலதிபர் அவரது மனைவியை கண்டித்தார். மேலும் டிரைவரையும் வேலையில் இருந்து நீக்கினார்.
தொழிலதிபருக்கு வெட்டு
இதனால் டிரைவர் சகாய ஜெனிபருக்கு தொழிலதிபர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் காலை பள்ளவிளை பகுதியில் தொழிலதிபர் நடைபயிற்சி மேற்கொண்டார். இதனை அறிந்த சகாய ஜெனிபர் அங்கு அரிவாளுடன் சென்றார். பின்னர் அவரை வழிமறித்து திடீரென அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய ஜெனிபரை கைது செய்தனர்.