பாப்பாரப்பட்டியில் சிவ சுப்பிரமணி சாமி கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


பாப்பாரப்பட்டியில் சிவ சுப்பிரமணி சாமி கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி புதிய சிவ சுப்பிரமணிய சாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், வள்ளி-தெய்வானையுன், முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதேபோல் இண்டூர் சுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story