நாமக்கல்லில் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


நாமக்கல்லில் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்லில் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.

கொடியேற்றம்

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதில் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கோவில் செயல் அலுவலர் இளையராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.சரவணன், கலைசெல்வி, அறங்காவலர் குழுவினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் சாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்ய உள்ளனர்.6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.

அன்று காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


Next Story