கார், மொபட், உரமூட்டைகள் தீப்பற்றி எரிந்து நாசம்


கார், மொபட், உரமூட்டைகள் தீப்பற்றி எரிந்து நாசம்
x

கார், மொபட், உரமூட்டைகள் தீப்பற்றி எரிந்து நாசமானது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பெரியதத்தூர் மெயின்ரோட்டு தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 47). நேற்று அதிகாலை இவரது வீட்டில் வேலை செய்யும் வேல்முருகன் என்பவர், மாடுகளை பராமரிப்பதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கார்ஷெட்டில் நின்ற கார் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டில் தூங்கிய ஹரிகிருஷ்ணனை எழுப்பியுள்ளார். அவர் வந்து பார்த்தபோது, கார்ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், மொபட், சைக்கிள், கார்ெஷட், 20 உர மூட்டைகள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இது குறித்து ஹரிகிருஷ்ணன் ஆண்டிமடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கார் உள்ளிட்டவற்றுக்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story