கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 போலீசார் படுகாயம்


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செல்லப்பாண்டி (வயது 48), போலீஸ்காரராக ஸ்ரீதர் (36) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆய்க்குடி-தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டன. இதில் செல்லப்பாண்டி, ஸ்ரீதர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் செல்லப்பாண்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story