பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி


பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி
x

சபரிமலைக்கு சென்றபோது கம்பம் புறவழிச்சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). இவரும், அவருடைய நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ராஜசேகர், மோகன்ராஜ் ஆகியோர் சபரிமலைக்கு காரில் சென்றனர். காரை அதே ஊரை சேர்ந்த பூபதி (27) என்பவர் ஓட்டினார். அப்போது கம்பத்தில் புறவழிச்சாலையில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story