தூத்துக்குடியில் கார் திருட்டு
தூத்துக்குடியில் கார் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு, ஆலடியூர் குள்ளார் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தர் (வயது 28), வக்கீல். தூத்துக்குடி மாவட்ட பதிவு அலுவலகம் முன்பு அலுவலகம் வைத்து உள்ளார். கடந்த 14-ந் தேதி இவரது காரை தூத்துக்குடி குறிஞ்சி நகர் 5-வது தெருவில் உள்ள இவரது அண்ணன் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரை காணவில்லை. காரில் முக்கிய ஆவணங்களும், ரூ.30 ஆயிரமும் இருந்தது. இதுகுறித்து பாலசுந்தர் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி காரை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story