கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதல்


கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதல்
x

கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர்

கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதல்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் 4 ரோடு பாலத்திற்கு அருகே உள்ள அணுகு சாலையில் திருச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்றது. அந்த காரின் டிரைவர் பிரதான சாலைக்கு திரும்பி வேகமாக செல்லும் வழியில் காரை திருப்பினார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி குழாய்கள் ஏற்றிச்சென்ற லாரி, அந்த காரின் வலது பக்கம் மோதியது.

மேலும் அந்த லாரி மைய தடுப்பு சுவரை தாண்டிச்சென்று, சென்னையில் இருந்து தேனி நோக்கி மளிகை பொருட்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியின் பின்பறும் மோதியது. இதில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் மளிகைப்பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் கார் டிரைவர் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 29), குழாய்கள் ஏற்றிச்சென்ற லாரியின் டிரைவர் சேலம் 5 ரோடு சரஸ்வதிபட்டியை சேர்ந்த செந்தில்வேலன்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் படுகாயம்

மளிகைப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியின் டிரைவர் தேனி மாவட்டம், அல்லிநகர் பகுதியில் உள்ள பள்ளி தெருவை சேர்ந்த ஜெகநாதன் ( 32) லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு டிரைவர்கள் மணிகண்டன், செந்தில்வேலன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story