கார், வேன் மோதல்; 8 பேர் படுகாயம்
ராஜபாளையம் அருகே கார், வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே கார், வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
8 பேர் படுகாயம்
ராஜபாளையம் அருகே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை தேசிகாபுரம் விலக்கு பகுதியில் தனியார் மில் மினிவேன் திரும்பும் போது, சுரண்டையிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் டிரைவர் முகமது தாரிக் (வயது35), ஹக்ஹீம்சேட் (38), மினிவேனில் பயணம் செய்த வள்ளி (40), சித்தம்மாள் (50), மினி வேன் டிரைவர் மணிகண்டன் (32), பேச்சியம்மாள் (45), கணபதியம்மாள் (38) தேசியம்மாள் (51) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாா் விசாரணை
இந்த விபத்தில் இருவாகனங்களும் சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.