டி.கல்லுப்பட்டி அருகே கார்-வேன் மோதல்; 13 பேர் படுகாயம்


டி.கல்லுப்பட்டி அருகே  கார்-வேன் மோதல்; 13 பேர் படுகாயம்
x

டி.கல்லுப்பட்டி அருகே கார்-வேன் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

பேரையூர்,

மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி வேன் ஒன்று டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள வி.அம்மாபட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் சாலையின் கீழே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இரண்டு வாகனங்களில் இருந்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு டி.கல்லுப்பட்டி போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். இரண்டு வாகனங்களில் இருந்த ராமமூர்த்தி (வயது 61) ராமசாமி(53), ராமகிருஷ்ணன்(58), ராஜூ(60), ராதாகிருஷ்ணன்(38), பிரபு(32), பால வெங்கடேஷ்(32), யாஷிகா(7), காவியா, வினோதினி, உள்பட காயம் அடைந்த 13 பேரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story