சேலம் குரங்குசாவடியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், மடிக்கணினி திருட்டு


சேலம் குரங்குசாவடியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், மடிக்கணினி திருட்டு
x

சேலம் குரங்குசாவடியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

சூரமங்கலம்:

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டநாதன் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 37). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் டீலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிவபிரகாசம் ஓசூரில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தார். வழியில் சேலம் குரங்குசாவடியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு, ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காருக்குள் இருந்த செல்போன், மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் கண்ணாடியை உடைத்து செல்போன், மடிக்கணியை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story