கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழா


கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழா
x

கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை அருகே உள்ள கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ கலந்து கொண்டு பள்ளியின் சிறந்த மாணவர் விருது, விளையாட்டு போட்டி, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து, பாராட்டி பேசினார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் நெடுங்கூர் கார்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரங்கசாமி, பள்ளி மேலாண்மை தலைவர் நீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி, வார்டு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.


Next Story