பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்
பாலத்தின் தடுப்புச் சுவர் மீது
மோதி தீப்பிடித்து எரிந்த கார்
திருப்பூர் வலையங்காட்டைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவர் நேற்று காலை ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியிலிருந்து திருப்பூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். லூர்துபுரம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடு ரோட்டுக்கு வந்த கார் தீப்பிடித்து எரிந்தது. பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியதில் காரை ஓட்டி வந்த அஸ்வின்குமார் காயமடைந்தார். அவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பினார்.
இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனேதீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரை ஓட்டி வந்த அஸ்வின்குமாரை புளியம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.