சரக்கு ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு சிறை


சரக்கு ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு சிறை
x

சங்ககிரியில் சரக்கு ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

சேலம்

சங்ககிரி

தேவூர் அருகே மோட்டூர் காட்டுவளவு ஆவணியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 35), விசைத்தறி தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், இவருடைய மனைவி நிர்மலா (23), மகள் அபினா (2) ஆகியோர் மொபட்டில் தேவூரில் இருந்து ஆவணியூர் குள்ளம்பட்டி வாய்க்கால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் முருகன் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். காயம் அடைந்த நிர்மலா, மகள் அபினா ஆகியோர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவேரிபட்டி பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் அருணாசலம் (58) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சங்ககிரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.ஆர்.பாபு தீர்ப்பு கூறினார்.


Next Story